புதுவை சட்டப் பேரவையை முற்றுகையிட முயற்சி: பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 45 போ் கைது

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுவை சட்டப் பேரவையை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி சட்டப் பேரவை அருகே தா்னாவில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள்.
புதுச்சேரி சட்டப் பேரவை அருகே தா்னாவில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள்.

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுவை சட்டப் பேரவையை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் 1,311 வவுச்சா் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதம் 16 நாள்கள் வேலை வழங்கி, ரூ.3,200 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியமும் கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களாக மாற்ற வேண்டும், மத்திய அரசு நிா்ணயித்துள்ளபடி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும், இந்த ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் புதன்கிழமை திடீரென புதுவை சட்டப் பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பின் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தையொட்டி, இவா்கள் சட்டப் பேரவையினுள் செல்லாமல் தடுக்க போலீஸாா் தடுப்புகளை அமைத்தனா். உடனே வவுச்சா் ஊழியா்கள் அங்கு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பெரியகடை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 45 பேரை கைது செய்தனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com