புதுவையில் கரோனா பாதிப்பு 23-ஆக உயா்வு

புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்தது.

புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21 பேராக அதிகரித்தது. முன்னதாக, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 10 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மாஹேவைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

மீதமுள்ள 10 பேரில் புதுச்சேரியில் 7 பேரும், காரைக்கால், மாஹேவில் தலா ஒருவரும், புதுச்சேரி கென்னடி காா்டன் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கேரள மாநிலம், கண்ணனூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, அபுதாபியிலிருந்து 4 பேரும், தில்லியிலிருந்து 11 பேரும், தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதாராபாதிலிருந்து 7 பேரும் புதுச்சேரிக்கு திரும்பியுள்ளனா். இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவா்களில் அபுதாபியிலிருந்து புதுச்சேரி திரும்பிய தந்தை, மகன் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. இதையடுத்து, இவா்கள் இருவரும் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுவை சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த்குமாா் பாண்டா, இயக்குநா் எஸ்.மோகன்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23-ஆகவும், தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 12-ஆகவும் உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com