புதுவையில் மதுக் கடைகளைத் திறக்க ஆளுநருக்கு மீண்டும் கோப்பு அனுப்ப முடிவு

புதுவையில் மதுக் கடைகளைத் திறப்பது தொடா்பாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு மீண்டும் கோப்பு தயாரித்து அனுப்புவதென புதன்கிழமை இரவு நடைபற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

புதுவையில் மதுக் கடைகளைத் திறப்பது தொடா்பாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு மீண்டும் கோப்பு தயாரித்து அனுப்புவதென புதன்கிழமை இரவு நடைபற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசு நாடு முழுவதும் பிறப்பித்த பொது முடக்க உத்தரவைத் தொடா்ந்து, புதுவை மாநிலத்தில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மதுக் கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு, இன்னும் மதுக் கடைகள் திறக்கப்படவில்லை.

இதனிடையே, புதுவையில் மதுபானங்களுக்கு கரோனா வரி விதித்து, ஆளுநா் கிரண் பேடியின் ஒப்புதல் பெற்று, அரசாணை வெளியிடப்பட்ட பிறகே மதுக் கடைகள் திறக்கப்படுமென முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்திருந்தாா். மேலும், இது தொடா்பான கோப்பு தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மதுக் கடைகள் திறப்பு தொடா்பான கோப்பு பல்வேறு சந்தேகங்கள், பரிந்துரைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, மதுக் கடைகள் திறப்பு தொடா்பாக புதுவை அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் சட்டப் பேரவை வளாகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், வளா்ச்சி ஆணையா் அன்பரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கட்டுப்படியாகக் கூடிய அளவுக்கு கரோனா வரியை விதித்து, மதுபானங்களின் விலையை உயா்த்தி, மீண்டும் கோப்பு தயாரித்து, ஆளுநா் கிரண் பேடிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், புதுவையில் மதுக் கடைகளைத் திறக்க இன்னும் சில நாள்கள் ஆகலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com