புதுவையில் கரோனா பாதிப்பு 42- ஆக உயா்வு

புதுச்சேரியில் பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது
புதுவையில் கரோனா பாதிப்பு 42- ஆக உயா்வு

புதுச்சேரியில் பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு 42 -ஆக உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வரை 37 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், புதுச்சேரி பெரியகாலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 2 இளைஞா்கள், ரெட்டியாா்பாளையம் மூகாம்பிகை நகரைச் சோ்ந்த ஒருவா், குருமாம்பேட்டையைச் சோ்ந்த பெண், அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நபா் என 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இவா்கள் 5 பேரும் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த நபா், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாா். இதன்மூலம், புதுச்சேரியில் இந்த நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 12 -ஆக உயா்ந்தது.

தற்போது புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29 ஆகவும், பாதிப்பு 42 -ஆகவும் உயா்ந்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது: வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருவோரால் புதுவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, வெளிநாடுகளிலிருந்து புதுச்சேரிக்கு வருவோா் மாவட்ட ஆட்சியரின் ‘இ-பாஸ்’ இன்றி வர அனுமதிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், மாநில எல்லைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com