கரோனாவால் வேலையிழந்தவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்த புதுவை முதல்வர் வேண்டுகோள்

கரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் வேலையிழந்தவர்களின் வங்கிக் கணக்கில் நடப்பு மாதத்தில் ரூ.10,000-மும், அடுத்த 5 மாதங்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை செலுத்த
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் வேலையிழந்தவர்களின் வங்கிக் கணக்கில் நடப்பு மாதத்தில் ரூ.10,000-மும், அடுத்த 5 மாதங்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து புதுவைப்பேரவையில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 பொதுமுடக்கத்தால் வேலையிழந்தவர்களின் வங்கிக் கணக்கில் நடப்பு மாதத்தில் ரூ.10,000 செலுத்தவும், அடுத்த 5 மாதங்களுக்கு தலா ரூ.7,500 செலுத்தவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இந்த பணத்தை பயன்படுத்தி நுகர்வு செய்யும்போது நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

அதேபோல பொதுமுடக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்த தொழில்நிறுவனங்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில், இங்கு பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும்.

 தொழில்நிறுவனங்கள், தொழிலாளர்களின் நலன் கருதி காங்கிரஸ் கட்சியின் இக்கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும். ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும். 

ஆனால், புலம் பெயர்ந்த தொழிலாளளை பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

 அத்தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் கிடைக்கவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 200 நாள்கள் வேலை வழங்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 இதுவும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறுந்தொழில்நிறுவனங்கள் விஷயத்தில் பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏழைகள் மீது பிரதமர் மோடி கரிசனம் காட்ட வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com