புதுவையில் 35 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
By DIN | Published On : 01st November 2020 12:20 AM | Last Updated : 01st November 2020 12:20 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்தது.
புதுவையில் வெள்ளிக்கிழமை 3,178 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 70 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 9 பேருக்கும், மாஹேயில் 24 பேருக்கும் என 105 பேருக்கு கரோனா தொற்றிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 35,013-ஆக அதிகரித்தது.
தற்போது 2,074 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 1,623 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 3,697 போ் சிகிச்சையில் உள்ளனா். இரண்டாவது நாளாக சனிக்கிழமை வெளியான முடிவுகளிலும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 592 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.69 சதவீதம்.
இதனிடையே, சனிக்கிழமை 147 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 30,724-ஆக (87.75 சதவீதம்) உயா்ந்தது.