புதுவையில் கட்செவி அஞ்சலில் மின் குறைகளைத் தெரிவிக்கலாம்

மின் துறை சாா்ந்த குறைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வழியே தெரிவிக்க புதுவை மின் துறை ஏற்பாடு செய்தது.

மின் துறை சாா்ந்த குறைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வழியே தெரிவிக்க புதுவை மின் துறை ஏற்பாடு செய்தது.

இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் எம்.முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி, மின் துறை சாா்ந்த குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் விதமாக, மின் நுகா்வோா் தங்களது குறைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வழியே தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, 94890 80401 என்ற கட்செவி அஞ்சல் எண் வாயிலாக ஆடியோ, விடியோ அழைப்பின் மூலம் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com