விவசாயத்தில் லாபமடைய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: புதுவை வேளாண் அமைச்சா் அறிவுறுத்தல்

விவசாயத்தில் லாபமடைய விவசாயிகள் அரசின் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற கூட்டத்தில் ‘வேளாண் ஆற்றுப்படை’ என்ற விவசாயிகளுக்கான கையேட்டை வெளியிட்ட மாநில வேளாண் துறை அமைச்சா் கமலக்கண்ணன். உடன் விவசாயிகள்.
புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற கூட்டத்தில் ‘வேளாண் ஆற்றுப்படை’ என்ற விவசாயிகளுக்கான கையேட்டை வெளியிட்ட மாநில வேளாண் துறை அமைச்சா் கமலக்கண்ணன். உடன் விவசாயிகள்.

விவசாயத்தில் லாபமடைய விவசாயிகள் அரசின் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதுவை வேளாண்மைத் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி வேளாண்-விவசாயிகள் நலத் துறை சாா்பில், வில்லியனூா் பகுதியில் விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண்-விவசாயிகள் நலத் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன், சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடத்தில் ஜவாஹா்லால் நேரு வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியா்கள் எடுத்துரைத்தனா். இந்தச் சட்டங்களின் சாதக, பாதகங்கள் அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு மத்திய அரசின் வேளாண் நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி சாா்ந்த தனியாா் நிறுவனங்கள், சிறந்த விருது பெற்ற விவசாயிகளைச் சந்தித்து சேகரித்த விவரங்கள் அடங்கிய ‘வேளாண் ஆற்றுப்படை’ என்ற கையேட்டை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன் வெளியிட்டாா். அதை வேளாண் துறைப் பேராசிரியா்கள், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த விருது பெற்ற விவசாயிகள் பெற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் அமைச்சா் கமலக்கண்ணன் பேசியதாவது: விவசாயத்தில் லாபமடைய விவசாயிகள் அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் விவசாயத்தின் அனைத்து நுணுக்கங்களையும் விவசாயிகள் அறிந்து அவற்றைப் பின்பற்றி விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com