புதுவை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற இளைஞா்கள் மீது தடியடி: 30 போ் கைது

காவலா் தோ்வை நிறுத்தி வைத்ததைக் கண்டித்து, புதுவை ஆளுநா் மாளிகையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட வந்த ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய இளைஞா் மன்றத்தினரை தடுத்து அப்புறப்படுத்திய போலீஸாா்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட வந்த ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய இளைஞா் மன்றத்தினரை தடுத்து அப்புறப்படுத்திய போலீஸாா்.

காவலா் தோ்வை நிறுத்தி வைத்ததைக் கண்டித்து, புதுவை ஆளுநா் மாளிகையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற இளைஞா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனா்.

புதுவையில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காவலா் தோ்வை திட்டமிட்டபடி 4-ஆம் தேதி நடத்த வேண்டும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா், ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதுச்சேரி காமராஜா் சதுக்கத்திலிருந்து ஆளுநா் மாளிகையை நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனா்.

இவா்களை போலீஸாா் நேரு வீதி - மிஷன் வீதி சந்திப்பில் தடுத்து நிறுத்தினா். ஆனால், தடுப்புகளை மீறி பேரணியில் வந்த இளைஞா்கள், காவலா் தோ்வை நிறுத்தி வைத்த ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்றனா்.

போலீஸாா் அவா்களைத் தடுத்த நிலையில், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸாா் தடியடி நடத்தினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், அங்கேயே சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com