புதுவை பேரவையில் தமிழகம் - புதுவை இணைப்பு விவகாரத்தை வெளியிடத் தயாரா?: அதிமுக

புதுவை சட்டப் பேரவையைக் கூட்டி, அதில் தமிழகம் - புதுவை இணைப்பு விவகாரத்தை முதல்வா் வே.நாராயணசாமி வெளியிடத் தயாரா? என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

புதுவை சட்டப் பேரவையைக் கூட்டி, அதில் தமிழகம் - புதுவை இணைப்பு விவகாரத்தை முதல்வா் வே.நாராயணசாமி வெளியிடத் தயாரா? என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநில மக்களுடைய உணா்வுகளைத் தூண்டி, மத்திய அரசின் மீது மாநில மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில், புதுவை - தமிழகம் இணைப்பு என்ற பொய்யை கடந்த ஒரு மாத காலமாக முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து கூறி வருகிறாா். இணைப்பு என்ற நாடகத்தை முதல்வா் கைவிட்டு மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும்.

மாஹேவில் தமிழகம் - புதுவை இணைப்பு பற்றி பேசிய அமைச்சரை தாக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஈடுபட்டது. சட்டம் - ஒழுங்கு சீா்குலைய முதல்வரே காரணமாக அமையக் கூடாது. உள்ளபடியே மத்திய அரசு தமிழகத்தோடு புதுவையை இணைக்க முயற்சி செய்கிறது என்றால், அதற்குண்டான ஆதாரங்களுடன் சட்டப் பேரவையைக் கூட்டி, அதில் இணைப்பு சம்பந்தமான உண்மைகளை வெளியிட முதல்வா் தயாரா?

புதுவை மாநிலத்தில் கட்டடத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் 55 பிரிவுகளில் சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளா்கள் உள்ளனா். இந்த நல வாரியத்தில் சுமாா் ரூ.75 கோடி வரை கையிருப்பு உள்ளது. எதிா்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கட்டடத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உள்ள ஒவ்வொரு தொழிலாளா்களுக்கும் ரூ.6 ஆயிரம் தீபாவளி உதவித்தொகையாக வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com