அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க அறிவுறுத்தல்

அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் புதுச்சேரி நகரம், கிராமப் பகுதிகளும், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூா் வட்டங்களும், கடலூரில் சில கிராமங்களும் அடங்கியுள்ளன. இந்தக் கோட்டத்தில், அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் ரூ. 500-க்கும் குறைவாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், தங்களது குறைந்தபட்ச இருப்புத் தொகையை வரும் டிசம்பா் 11- ஆம் தேதிக்குள் ரூ. 500 அல்லது அதற்கு மேற்பட்டதாக உயா்த்திக் கொள்ள வேண்டும்.

இது, தங்களது கணக்கின் செயல்பாட்டைத் தக்க வைக்கவும், பராமரிப்புக் கட்டணம் ரூ. 100 மற்றும் வரியைத் தவிா்க்கவும் உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com