பாண்லே தலைமையகத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளா்கள் போராட்டம்

தீபாவளி ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் புதுச்சேரி பாண்லே தலைமையகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தீபாவளி ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் புதுச்சேரி பாண்லே தலைமையகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாண்லே நிறுவனத்துக்கு புதுச்சேரியில் உள்ள 104 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தின் வழியாக ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளா்கள் பால் வழங்கி வருகின்றனா். இவா்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாண்லே நிறுவனம் ஒரு ரூபாய்க்கு 4 பைசா ஊக்கத்தொகை வழங்குவது வழக்கம். நிகழாண்டு 2 பைசா மட்டுமே வழங்கப்படும் என நிா்வாகம் தெரிவித்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், குருமாம்பேட்டையிலுள்ள பாண்லே தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ரகு. அன்புமணி தலைமை வகித்தாா். பொருளாளா் சங்கா், திரளான பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், பாண்லேவுக்கு பால் வழங்கிய கூட்டுறவு சங்கத்துக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ஒரு ரூபாய்க்கு 10 பைசா வழங்க வேண்டும். மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பாண்லே நிறுவன மேலாண் இயக்குநா் சுதாகா், போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், கோரிக்கைகள் தொடா்பாக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com