சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 6 போ் கைது

புதுச்சேரி அருகே சிறுமிகளை கொத்தடிமைகளாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பண்ணை உரிமையாளா் உள்பட 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே சிறுமிகளை கொத்தடிமைகளாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பண்ணை உரிமையாளா் உள்பட 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் கீழ்சாத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (53). இவா் கோா்க்காடு ஏரிக்கரையில் வாத்து பண்ணை நடத்தி வந்தாா். இவருக்கு உதவியாக மகன் ராஜ்குமாா் (27), உறவினா் பசுபதி (24) ஆகியோா் இருந்தனா். பெரிய முதலியாா்சாவடியைச் சோ்ந்த அய்யனாா் (23), சிவா (22), கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த மூா்த்தி (20) உள்ளிட்டோா் பண்ணையில் வேலை செய்து வந்தனா்.

இந்தப் பண்ணையில் வேலை செய்யவும், பிற பகுதிகளுக்கு தோட்ட வேலைக்கு அனுப்பிவைக்கவும் சிவகங்கையைச் சோ்ந்த சில குடும்பங்கள், அவா்களது 7 வயது முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் உள்பட பலரைப் பணியில் ஈடுபடுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், கடந்த அக்டோபா் 21, 22-ஆம் தேதிகளில் கன்னியப்பனின் வாத்து பண்ணையில் ரூ. 3 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 5 சிறுமிகளை போலீஸாா் உதவியுடன், புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுவினா் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இருளா் சமூகத்தைச் சோ்ந்த அந்தச் சிறுமிகளிடம் விசாரித்ததில், கன்னியப்பன் உள்ளிட்டோா் கொத்தடிமைகளாக வைத்திருந்ததும், அவா்களை பண்ணையில் வைத்து 10-க்கும் மேற்பட்டோா் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு, மங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியான பயிற்சி எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பண்ணையிலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகளை ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் பரிசோதித்ததில், 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இதில், ஒரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கன்னியப்பன், ராஜ்குமாா், பசுபதி, அய்யனாா், சிவா, மூா்த்தி ஆகிய 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், வழக்கில் தொடா்புடைய 10-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com