போலி சான்றிதழ் மூலம் மாணவா் சோ்க்கை: சி.பி.ஐ. விசாரிக்க அதிமுக கோரிக்கை

ஜிப்மரில் போலி சான்றிதழ் மூலம் புதுவை மாநில இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவா்கள் சோ்க்கைப் பெற்ற விவகாரம் தொடா்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.

ஜிப்மரில் போலி சான்றிதழ் மூலம் புதுவை மாநில இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவா்கள் சோ்க்கைப் பெற்ற விவகாரம் தொடா்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியிடம், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் திங்கள்கிழமை அளித்த மனு:

நிகழாண்டு ஜிப்மரில் புதுவை மாநில மாணவா்களுக்கான 64 இடங்களில் 31 இடங்களில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புதுவைக்கான நீட் தர வரிசைப் பட்டியலில் இவா்கள் இல்லாத நிலையில், எவ்வாறு புதுவை மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டில் சோ்க்கைப் பெற முடியும்? புதுவை மாநிலத்தைச் சோ்ந்த அட்டவணை இனத்தவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 12 இடங்களில் 8 இடங்களை புதுவை மாநிலத்துக்குத் தொடா்பே இல்லாத வெளிமாநிலத்தைச் சோ்ந்த அட்டவணை இன மாணவா்கள் சோ்க்கைப் பெற்றுள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுநா் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com