புதுவையில் கரோனா பாதிப்பு 36 ஆயிரமாக உயா்வு

புதுவையில் புதிதாக 102 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,

புதுவையில் புதிதாக 102 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரமாக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் 3,721 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 57, காரைக்காலில் 10, ஏனாமில் 2, மாஹேவில் 33 என மொத்தம் 102 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரமாக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சோ்ந்த 67 வயது மூதாட்டி ஜிப்மரிலும், காரைக்கால் திருநள்ளாறு சுரக்குடியைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 604-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, 113 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,325-ஆக (95.35 சதவீதம்) அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது 728 போ் வீடுகளிலும், 343 போ் மருத்துவமனைகளிலும் என மொத்தம் 1,071 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தற்போது தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்வது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com