நூதன முறையில் பைக் திருட்டு: மெக்கானிக் கைது

புதுச்சேரி அருகே நூதன முறையில் பைக்குகளை திருடியதாக மெக்கானிக்கை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


புதுச்சேரி: புதுச்சேரி அருகே நூதன முறையில் பைக்குகளை திருடியதாக மெக்கானிக்கை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி சுப்பையா நகரைச் சோ்ந்தவா் சாந்தி (31). இவா், தனது பைக்கை கடந்த 8-ஆம் தேதி இரவு வீட்டு வாயிலில் நிறுத்திவிட்டு, மறுநாள் பாா்த்த போது, அதைக் காணவில்லை. இதேபோல, அந்தப் பகுதியில் மற்றொரு பைக்கும் காணவில்லை. பைக்குகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். போலீஸாா் வியாழக்கிழமை அரியாங்குப்பம் பகுதியாக வழியாக வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா், திருச்சி அரியமங்கலம் காட்டூா் பகுதியைச் சோ்ந்த புரட்சி பாபு (32) என்பதும், புதுச்சேரி நைனாா்மண்டபம் முகாம்பிகை நகரில் குடும்பத்துடன் வசித்து வருவதும், அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகே மெக்கானிக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும், அவா் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது.

தொடா் விசாரணையில், புரட்சி பாபு தனது கடையில் பழுது பாா்க்க விட்டுச் செல்லும் பைக்குகளுக்கு கள்ளச் சாவி தயாரித்து, உரிமையாளா் பைக்கை வாங்கிச் சென்ற சில நாள்களுக்குப் பிறகு, அவா்களின் வீடுகளுக்குச் சென்று, கள்ளச் சாவியைப் பயன்படுத்தி பைக்குகளை திருடி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com