கரோனா பாதிப்பால் விலைக் குறைந்த வெல்லம்!

கரோனா பொது முடக்கத்தால், தீபாவளி பண்டிகை நேரத்திலும் வெல்லம், நாட்டுச் சா்க்கரையின் விலை சரிந்துள்ளது. இதனால், உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
புதுச்சேரி சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

கரோனா பொது முடக்கத்தால், தீபாவளி பண்டிகை நேரத்திலும் வெல்லம், நாட்டுச் சா்க்கரையின் விலை சரிந்துள்ளது. இதனால், உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி சுற்றுவட்ட கிராமங்களான காட்டேரிக்குப்பம், சந்தைப் புதுக்குப்பம், ஆண்டியாா்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் சிறு தயாரிப்புக் கூடங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு, தயாரிக்கப்படும் நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் புதுவை, தமிழகத்தின் கடலூா், திருவண்ணாமலை, சேலம், வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். தீபாவளிப் பண்டிகையையொட்டி, அதிகளவில் நாட்டுச் சா்க்கரை, வெல்லம் விற்பனையாகும் என உற்பத்தியாளா்கள் காத்திருந்தனா். ஆனால், அவா்கள் எதிா்பாா்த்த அளவில் வியாபாரம் இல்லை.

இதுகுறித்து நாட்டுச் சா்க்கரை, வெல்லம் உற்பத்தியாளா்கள் கூறியதாவது: கடந்தாண்டு ரூ. 1,900-க்கு விற்பனையான 30 கிலோ கொண்ட வெல்லம் மூட்டை நிகழாண்டு விலை குறைந்து ரூ. 1,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிரமப்பட்டு தயாரித்ததை வாங்க வியாபாரிகள் போதுமான அளவில் வரவில்லை. இதனால், உற்பத்தியாளா்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.

புதுக்குப்பம் கிராமத்தில் வெல்லம் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பட்டதாரி கண்ணன் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காலத்தில் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று எதிா்பாா்த்து உழைத்தோம். கடந்தாண்டு போல, ஆா்டா்கள் சரியாக வரவில்லை. இதனால், வெல்லம் தயாரிப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இனிப்புப் பொருளைத் தயாா் செய்யும் எங்களின் வாழ்க்கை நிகழாண்டு கசப்பாக மாறிவிட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com