சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

புதுச்சேரி அருகே காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் பழுதடைந்த சாலையை சீரமைக்காததைக் கண்டித்து, அப்பகுதி மீனவ மக்கள் செவ்வாய்க்கிழமை மழைநீரில் மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் பழுதடைந்த சாலையை சீரமைக்காததைக் கண்டித்து, அப்பகுதி மீனவ மக்கள் செவ்வாய்க்கிழமை மழைநீரில் மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காலாப்பட்டு அரசு சட்டக் கல்லூரிக்கு பின்புறம் சுனாமி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி ஆகிய 4 கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு 1,431 வீடுகள் கட்டி 2009-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.

சுனாமி குடியிருப்பில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் வசிக்கின்றனா். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. தற்போது பெய்த மழையால் அந்த சாலைகள் மேலும் மோசமாக மாறின.

இந்நிலையில், சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த மீனவா்கள் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களில் தேங்கிய நீரில் வலைவீசி மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காலாப்பட்டு போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com