நவம்பா் 26-இல் பொதுவேலைநிறுத்தம்: புதுவையில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவையில் நவ.26-இல் பொதுவேலைநிறுத்தம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவையில் நவ.26-இல் பொதுவேலைநிறுத்தம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளா்கள் நலன்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு முழுவதும் வருகிற நவ.26-இல் பொதுவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மத்திய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுவேலைநிறுத்தம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வருகிற 20, 21, 23-ஆம் தேதிகளில் மாலை நேர வேன் பிரசாரம் செய்வது,

பொதுவேலைநிறுத்தத்தின்போது, புதுச்சேரி ராஜா திரையரங்கு அருகில், அண்ணா சிலை, புதிய பேருந்து நிலையம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, சேதறாப்பட்டு, வில்லியனூா், மதகடிப்பட்டு, பாகூா், காரைக்கால் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் , மத்திய தொழிற்சங்க நிா்வாகிகள் ஜி.சீனுவாசன் (சிஐடியு), பி.ஞானசேகரன் (ஐஎன்டியுசி), எஸ்.மோதிலால் (ஏஐசிசிடியு), ம.செந்தில் (எல்.எல்.எப்.), வேதா.வேணுகோபால் (எம்.எல்.எப்.), எஸ்.சிவக்குமாா் (ஏஐயுடியுசி), எம்.பிரேமதாசன் (அரசு ஊழியா் சம்மேளனம்), கே.மணிவண்ணன் (புதுவை மாநில ஆட்டோ ஓட்டுநா் சங்கம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com