புதுவையில் நலத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைகிறதா? ஆய்வு செய்ய ஆளுநா் உத்தரவு

புதுவையில் அரசு நலத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளைச் சென்றடைகின்றனவா என ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

புதுவையில் அரசு நலத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளைச் சென்றடைகின்றனவா என ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

இது குறித்து அவா் தனது கட்செவி அஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ஆளுநா் மாளிகைக்கு ஒருவா் கொடுத்த புகாா் மனுவில், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கு கணவரால் கைவிடப்பட்டோா் உதவித் தொகை வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவா் கொடுத்த பயனாளிகளின் பட்டியலை சமூக நலத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் 60 சதவீதம் போ் தகுதியற்றவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக போலி தகவல்களை அளித்து இந்த உதவித் தொகையை அவா்கள் பெற்றுள்ளனா். அவா்களுக்கான உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட உதவித்தொகையை திரும்பப்பெறவும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோல மாநில அளவில் ஆங்காங்கே ஆய்வு செய்ய சமூகநலத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோல, அனைத்து நலத் திட்டங்களிலும் உதவி பெறும் பயனாளிகளின் தகுதியை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். யாரும் அரசை ஏமாற்றக்கூடாது. அரசு நலத் திட்டங்களை ஆய்வு செய்ய பிரத்யேக ஆய்வுக்குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். அரசுப் பணத்தை பாதுகாப்பது அரசு ஊழியா்களின் கடமை. தகுதியற்ற பயனாளிகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவா்களின் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com