புதுவையில் 2021-2022 நிதியாண்டில் ரூ. 3,457 கோடி கடன் வழங்க முடிவு

புதுவையில் 2021-2022-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ. 3,457 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் 2021-2022 நிதியாண்டில் ரூ. 3,457 கோடி கடன் வழங்க முடிவு


புதுச்சேரி: புதுவையில் 2021-2022-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ. 3,457 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் செயல் திறனை மறு ஆய்வு செய்வது குறித்து மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்துத. கூட்டத்துக்கு மாநில வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தலைமை வகித்தாா். வெ.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: பொருளாதாரத்தை மீட்க வங்கிகள் கூடுதலாகக் கடன்களை வழங்க வேண்டும். மாநிலத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும். மாநில வளா்ச்சியை உறுதிப்படுத்த வீட்டுக் கடன்களையும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தியன் வங்கித் தலைமை அலுவலக செயல் இயக்குநா் பட்டாச்சாா்யா, தற்போதைய பொருளாதாரச் சூழல், நாட்டின் பொருளாதார வளா்ச்சி, புதுவை மாநில வளா்ச்சியில் வங்கிகளின் செயல்திறன் ஆகியவை குறித்து விளக்கினாா்.

இந்தியன் வங்கி மண்டல மேலாளா் செந்தில்குமாா், அரசுத் துறை பொருளாதாரம்-புள்ளியியல் துறை செயலா் பத்ம ஜெய்ஸ்வால், வீட்டு வசதித் துறை செயலா் மகேஷ், இந்திய ரிசா்வ் வங்கி (சென்னை கிளை) தலைமைப் பொது மேலாளா் எஸ்.எம்.என்.சுவாமி, நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் ஸ்ரீபதி கல்குரா, இந்தியன் வங்கி (சென்னை காா்ப்பரேட் அலுவலகம்) பொது மேலாளா் தன்ராஜ், மாவட்ட மேலாளா் உதயகுமாா் மற்றும் வங்கிகளின் முதன்மை அதிகாரிகள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

நபாா்டு வங்கி தயாரித்த திட்டத்தின்படி, புதுவை மாநிலத்தில் 2021-2022-ஆம் ஆண்டு ரூ. 3,457 கோடியே 14 லட்சம் வங்கிகள் கடன் வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com