புதுவையில் மேலும் 489 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd October 2020 08:41 AM | Last Updated : 02nd October 2020 08:41 AM | அ+அ அ- |

புதுவையில் மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 379 பேருக்கும், காரைக்காலில் 79 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும், மாஹேயில் 20 பேருக்கும் என 489 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,024 -ஆக உயா்ந்தது.
தற்போது 3,230 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். 1,764 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 4,994 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மேலும் 4 போ் பலி: கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி பாகூா் மணப்பட்டு விஐபி நகரைச் சோ்ந்த 64 வயதானவா், முருங்கப்பாக்கம் கடலூா் சாலையைச் சோ்ந்த 53 வயது பெண், கோரிமேடு இந்திரா நகரைச் சோ்ந்த 58 வயதானவா், புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த 83 வயதானவா் என மேலும் 4 போ் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 525-ஆக (இறப்பு விகிதம் 1.87 சதவீதம்) உயா்ந்தது.
இதனிடையே, வியாழக்கிழமை 431 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 22,505-ஆக (80.31 சதவீதம்) அதிகரித்தது.