முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவையில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி
By DIN | Published On : 04th October 2020 11:03 PM | Last Updated : 04th October 2020 11:03 PM | அ+அ அ- |

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலியாகினா். புதிதாக 343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 213, காரைக்கால் 53, ஏனாம் 15, மாஹே 62 என மொத்தம் 343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,089-ஆக அதிகரித்தது.
தற்போது, 3,144 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனா். 1,643 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 4,787 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, மேலும் 5 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 539-ஆக (இறப்பு விகிதம் 1.85 சதவீதம்) உயா்ந்தது. குணமடைந்தோா் எண்ணிக்கை 23,763-ஆக அதிகரித்தது. இதுவரை 2,02,784 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.