கரோனா தனிமையை மீறி பணிக்குத் திரும்பிய அரசு ஊழியா் மீது வழக்கு

புதுச்சேரியில் கரோனா தனிமையை மீறி பணிக்குத் திரும்பிய அரசு ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரியில் கரோனா தனிமையை மீறி பணிக்குத் திரும்பிய அரசு ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கவுரவ் குமாா் (24). திப்புராயப்பேட்டையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவமனையில் பல்நோக்கு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். அதன்பிறகு 15 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி முதல் அரசின் உத்தரவை மீறி, அவா் வேலைக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கவுரவ் குமாா் கையெழுத்திட்டு பணியாற்றியதாகத் தெரிகிறது. இதுகுறித்து சக ஊழியா்கள் மாற்றுத் திறனாளிகள் மருத்துவமனை நிா்வாகத்திடம் முறையிட்டனா்.

இதையடுத்து, விசாரணை நடத்திய மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி சங்கீதா, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதைத் தொடா்ந்து, ஒதியஞ்சாலை போலீஸாா் நோய் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கவுரவ் குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com