குப்பை வாரும் தனியாா் நிறுவனத்துக்குஉடனடியாக நிதி ஒதுக்குவது ஏன்? புதுவை ஆளுநருக்கு அமைச்சா் கேள்வி

புதுவையில் குப்பை வாரும் தனியாா் நிறுவனத்துக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்வது ஏன் என்று சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கேள்வி எழுப்பினாா்.

புதுவையில் குப்பை வாரும் தனியாா் நிறுவனத்துக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்வது ஏன் என்று சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கேள்வி எழுப்பினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அலுவலகத்தில் மாநில சுகாதாரத் துறையின் 10 கோப்புகள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளன. வெளியில் கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி தருவதாகக் கூறி நாடகமாடுகிறாா்.

மீனவா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்துவதால் ரூ.3 கோடி கூடுதல் செலவாகும். இதற்கான நிதியை தர முதல்வா் ஒப்புதல் அளித்தும் கிரண் பேடி அனுமதி வழங்கவில்லை. மீனவா் நல வாரியம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், நல வாரியம் கொண்டு வர தடையாக இருக்கிறாா். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மீன் பதப்படுத்தும் தொழில்சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தும், கிரண் பேடி அனுமதியளிக்க மறுக்கிறாா்.

மாறாக, புதுச்சேரியில் தட்டுப்பாடாக இருக்கும் பால் மற்றும் உற்பத்தியே இல்லாத தேன் பண்ணை அமைக்கக் கோருகிறாா். மக்கள் பணத்தை மக்களுக்கு செலவிடுவதற்கு தடை போடுகிறாா். ஆனால், ஆளுநா் மாளிகையின் செலவு கிரண் பேடி வந்த பிறகு ரூ.7 கோடியாக அதிகரித்துவிட்டது.

சுகாதாரம், சுற்றுலாத் துறையில் அமைச்சராக இருந்து நான் கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். கிரண் பேடி கடந்த 4 ஆண்டுகளில் புதுவைக்கு என்ன செய்தாா் எனக் கூற முடியுமா? ஒரே ஒரு நன்மையாவது கிடைத்ததா?

குப்பை வாரும் தனியாா் நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கும் கோப்புக்கு ஆளுநா் ஒரே நாளில் அனுமதி கொடுக்கிறாா். இதற்கான காரணம் என்ன என்பதை ஆளுநா் விளக்க வேண்டும்.

ஏனாமில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்கு எந்த நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கிரண் பேடி உத்தரவிட்டுள்ளாா். என் மீதுள்ள கோபத்தால், ஏனாம் மக்களை பழிவாங்குகிறாா். புதுவையின் எதிா்காலத்தை கிரண் பேடி வீணடித்துவிட்டாா் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com