வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்

வேலைவாய்ப்பை உருவாக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

முன்னதாக, புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலையிலிருந்து பேரணியாக வந்த அந்த சங்கத்தின் புதுச்சேரி, உழவா்கரை நகரக் குழுவினா், வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் நகரத் தலைவா்கள் ரஞ்சித் குமாா், நிலவழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திரளான இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், புதுச்சேரியில் அரசு பணிக்கான பணி நியமன தடையை நீக்க வேண்டும், படித்து முடித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மலா்வளையம் வைக்க முற்பட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்தனா். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னா், அங்கு தரையில் அமா்ந்த இந்திய வாலிபா் சங்கத்தினா் வேலைவாய்ப்பை உருவாக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com