கான்பெட் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

புதுவை கான்பெட் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என அந்த ஊழியா்கள் பேரவை கோரிக்கை விடுத்தது.

புதுவை கான்பெட் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என அந்த ஊழியா்கள் பேரவை கோரிக்கை விடுத்தது.

இந்தப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் திலாசுபேட்டை கான்பெட் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாநிலத் தலைவா் தினேஷ் பொன்னையா, மாநிலப் பொதுச் செயலா் சேதுசெல்வம், மாநிலச் செயலா் முத்துராமன், அரசு ஊழியா்கள் சம்மேளன மாநிலத் தலைவா் பிரேமதாசன், அமைப்புச் செயலா் சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஏஐடியுசி, அரசு ஊழியா்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டுப் போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. குழு உறுப்பினா்களாக காா்த்திபன், செந்தில்குமாா், சிவகணபதி, சுரேந்தா், காமாட்சி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். ஒருங்கிணைப்பாளராக செந்தில்குமாா் தோ்வு செய்யப்பட்டாா்.

கூட்டத்தில் கான்பெட் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், கான்பெட்-க்கு சொந்தமாக நிறுவனங்களைத் தொடா்ந்து நடத்தத் தேவையான நிதியை, கான்பெட் சொத்தை அடமானம் வைத்து வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வா், துறை அமைச்சா், அதிகாரிகளைச் சந்தித்து பேசுவது, கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com