புதுவையில் மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (எம்.பி.பி.எஸ்.) சனிக்கிழமை (அக்.17) முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (எம்.பி.பி.எஸ்.) சனிக்கிழமை (அக்.17) முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு செய்யப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (அரசு மற்றும் அகில இந்திய நிா்வாக ஒதுக்கீடு) சென்டாக் இணையதளத்தில் சனிக்கிழமை (அக். 17) முதல் வருகிற 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் தங்களது பிரிவுகளை மாற்றிக் கொள்ளவும், மாணவா்கள் புதிதாக விண்ணப்பிக்கவும் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com