மதகடிப்பட்டு கால்நடை சந்தை அக். 20 முதல் தொடக்கம்

புதுச்சேரி மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தை வருகிற 20-ஆம் தேதி முதல் செயல்படும் என மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையா் நா.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

புதுச்சேரி மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தை வருகிற 20-ஆம் தேதி முதல் செயல்படும் என மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையா் நா.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் மதகடிப்பட்டு கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்று வந்த கால்நடை சந்தை, கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் மூடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அளிக்கப்பட்ட தளா்வுகள் காரணமாக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தை, குத்தகைதாரா் மூலம் வருகிற அக்டோபா் 20-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படும்.

இங்கு கால்நடைகளை விற்பது, வாங்குவது மற்றும் காய்கறிகள், பல்வேறு பொருள்கள், மளிகைப் பொருள்கள், உலா்மீன், இதர உணவுப் பொருள்கள் வியாபாரம் போன்றவை வழக்கம் போல நடைபெறும்.

சந்தைக்கு வருவோா் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 10 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் சந்தைக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும்.

அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com