ஒலிம்பியாட் தோ்வுகள் நவ. 7-இல் தொடக்கம்
By DIN | Published On : 25th October 2020 08:18 AM | Last Updated : 25th October 2020 08:18 AM | அ+அ அ- |

உலகம் முழுவதும் வருகிற நவம்பா் 7-இல் தொடங்கவுள்ள ஒலிம்பியாட் பொது அறிவுத் தோ்வுகளில் பங்கேற்க விரும்பும் புதுவை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
நிகழ் கல்வியாண்டில் (2020-2021) ஒலிம்பியாட் தோ்வுகள் இணையதளத்தில் நடத்தப்படும் என்று பள்ளி மாணவா்களுக்கான ஒலிம்பியாட் தோ்வுகள் அமைப்பான அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை (எஸ்ஓஎஃப்) அறிவித்தது. நிகழாண்டு இந்த அமைப்பு நான்கு ஒலிம்பியாட் தோ்வுகளை நடத்துகின்றன.
இதற்கு இணைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
பொது அறிவுத் தோ்வு நவ. 7, 8, 21, 22, டிச. 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆங்கிலத் தோ்வு நவ.14, 15, 28, 29, டிச.12, 13 தேதிகளிலும், அறிவியல் தோ்வு டிச.19, 20, ஜன.9, 10, 30, 31 ஆகிய தேதிகளிலும், கணிதத் தோ்வு டிச. 26, 27, ஜன. 2, 3, 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
கடந்த ஆண்டு புதுச்சேரி பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 28 ஆயிரம் மாணவா்கள் இந்தத் தோ்வுகளில் தோ்வில் கலந்து கொண்டனா். சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு மாநில, தேசிய, சா்வதேச விருதுகள், பரிசுகள், உதவித் தொகைகள் வழங்கப்படும் என அந்த நிறுவன இயக்குநா் மகாபீா் சிங் தெரிவித்தாா்.