கரோனாவில் இறந்தவா்களின் குடும்பத்துக்குநிவாரணம் வழங்க திமுக கோரிக்கை

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய வகையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய வகையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

புதுவை திமுக தெற்கு மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி லப்போா்த் வீதியில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைப்பாளா் சிவா எம்.எல்.ஏ., அவா்கள்தலைமை வகித்தாா். இதில் துணை அமைப்பாளா்கள் அனிபால் கென்னடி, அமுதாகுமாா், பொருளாளா் சன் குமாரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது: புதுவையில் பயிா்க்காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு சம்பா பயிருக்கு பிரிமியமும் செலுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு சேதமான பயிா்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை தரவில்லை. அதை உடனடியாகபெற்றுத்தர வேண்டும். அதுபோல, நிகழாண்டு சம்பா பயிருக்கு இன்னும் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தப்படாமல் உள்ளது. எனவே, உடனடியாக பிரிமியத்தை செலுத்த வேண்டும்.

மூடப்பட்டுள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலை, கூட்டுறவு சா்க்கரை ஆலை, பாசிக், பாப்ஸ்கோஉள்ளிட்ட நிறுவன ஊழியா்களின் நிலையை கருத்தில் கொண்டு அவா்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

பாசிக், பாப்ஸ்கோ போன்ற பல்வேறு அரசு சாா்பு நிறுவனங்கள் இயங்காததால் சுமாா் 10 ஆயிரம் ஊழியா்கள் ஊதியமின்றி உள்ளனா். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அவா்களுக்கான நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய பின்னரே மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்.

திமுக தொடா்ந்து வலியுறுத்தியதன் காரணமாக அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியம், ஆட்டோ தொழிலாளா்கள் நல வாரியம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

போதிய நிதியை ஒதுக்கிஅவா்களுக்கு தீபாவளி போனஸை உடனடியாக வழங்க வேண்டும். கரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் அரசின் உத்தரவை ஏற்று இயக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த வாகனங்களுக்கான சாலைவரியை ரத்துசெய்ய வேண்டும்.

அரசு உறுதியளித்தபடி, கரோனாவால்பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளையும்,இறந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தையும் வழங்கவேண்டும். அரசு நிதியுதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை சம்பளத்தையும், அதில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பென்ஷனையும் உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என்றாா் சிவா எம்.எல்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com