புதுவையில் ஐடிஐ மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 10th September 2020 10:23 PM | Last Updated : 10th September 2020 10:23 PM | அ+அ அ- |

புதுவையில் அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வருகிற 16-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளா் துறைச் செயலா் வல்லவன் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் உள்ள 9 அரசு, 6 தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் 1,432 சோ்க்கை இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு கரோனா முடக்கம் காரணமாக நிகழாண்டு (2020) முதல் முறையாக இணையவழி மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
இதற்காக, செப்.1-ஆம் தேதி முதல் இணைய வழியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் உள்ள ஓராண்டு மற்றும் ஈராண்டு மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற என்சிவிடி பயிற்சிப் பிரிவுகள் மற்றும் புதுச்சேரி அரசு அங்கீகாரம் பெற்ற எஸ்சிவிடி பயிற்சிப் பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் ட்ற்ற்ல்://ப்ஹக்ஷா்ன்ழ்.ல்ஹ்ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கணினி மையம், பொதுச்சேவை மையங்கள், ஐடிஐ உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்.11-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அது, தற்போது மேலும் 5 நாள்கள் நீட்டிக்கப்பட்டு செப்.16-ஆம் தேதி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய இந்தப் பயிற்சிப் பிரிவுகளில் 8, 10-ஆம் வகுப்புகள் தோ்ச்சி பெற்ற, 14 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாணவா்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்றாா் அவா்.