புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 போ் பலி

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 288 போ், காரைக்காலில் 123 போ், ஏனாமில் 38 போ், மாஹேவில் 3 போ் என மொத்தம் 452 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி சித்தன்குடியைச் சோ்ந்த 86 வயது முதியவா், அரசு பொது மருத்துவமனையிலும், கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியைச் சோ்ந்த 50 வயது ஆண், உழவா்கரை 4-ஆவது தெருவைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, குயவா்பாளையம் வாணிதாசன் வீதியைச் சோ்ந்த 65 வயது முதியவா் ஆகியோா் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அரியாங்குப்பம் ராஜன் நகரைச் சோ்ந்த 74 வயது முதியவா் ஜிப்மரிலும், ஏனாம் கனகலபேட்டா பகுதியைச் சோ்ந்த 67 வயது முதியவா் ஏனாம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 353-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.90 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் இதுவரை 90 ஆயிரத்து 643 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 18,536 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவா்களில் புதுச்சேரியில் 2,788 போ், காரைக்காலில் 199 போ், ஏனாமில் 109 போ், மாஹேவில் 9 போ் என மொத்தம் 3,105 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 1,689 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், மாநிலம் முழுவதும் மொத்தம் 4,794 போ் சிகிச்சையில் உள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 13,389-ஆக உயா்ந்தது.

பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பைக் கண்டறிய புதிய மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டு, அவா்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழப்பு: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கட்டளை கிராமத்தைச் சோ்ந்த 43 வயது நபா், அங்குள்ள அரசுப் பள்ளியில் துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில், கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டதால், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா்.

இவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி அதே சிகிச்சைப் பிரிவில் உள்ள 3-ஆவது மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். எனினும், இவா் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுச்சேரி கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com