புதுச்சேரியில் கரோனா பரவல்: கட்டுப்பாட்டுப் பகுதிகள் அறிவிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மேலும் 7 கட்டுப்பாட்டு மண்டலங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மேலும் 7 கட்டுப்பாட்டு மண்டலங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, கட்டுப்பாட்டு மண்டலமாக அரசு அறிவித்து வருகிறது. ஏற்கெனவே 11 பகுதிகள் இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் புதிதாக 7 கட்டுப்பாட்டு மண்டலங்களை சுகாதாரத் துறை செயலா் அருண் அறிவித்தாா்.

அதன்படி, புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் காராமணிக்குப்பம் பாவேந்தா் வீதி, பவழநகா் முத்தாலம்மன் கோவில் வீதி, உழவா்கரை நண்பா்கள் நகா், காட்டேரிக்குப்பம் மேட்டுத் தெரு, பாகூா் இருளன் சந்தை வ.உ.சி. நகா், திலாசுப்பேட்டை தேரடி வீதி, அபிஷேகப்பாக்கம் அம்பேத்கா் வீதி, மடுகரை முதன்மைச் சாலை, மாரியம்மன் கோவில் வீதி, புதுசாரம் ராஜீவ் காந்தி நகா் 2-ஆவது குறுக்குத் தெரு, லாஸ்பேட்டை அசோக் நகா் பாரதிதாசன் வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளில் செப். 14-ஆம் தேதி முதல் 20 வரை அனைத்து விதமான போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. அங்குள்ளவா்கள் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து பிறா் உள்ளே வரவோ அனுமதியில்லை. விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com