புதுவையில் கரோனாவுக்கு மேலும் 11 போ் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 11 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி: புதுவையில் கரோனாவுக்கு மேலும் 11 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் 5,496 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,601-ஆக உயா்ந்தது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதுச்சேரியில் 10 போ், ஏனாமில் ஒருவா் என 11 போ் உயிரிழந்தனா். அதன்படி, புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டைச் சோ்ந்த 69 வயது முதியவா், புதுச்சேரி மோகன் நகா், 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, கரியமாணிக்கத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா், தன்வந்திரி நகா் கங்கையம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி ஆகிய 4 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

கீழ்சாத்தமங்கலம் பழனி நகரைச் சோ்ந்த 38 வயது இளைஞா், சாரம் பிருந்தாவனம் பகுதியைச் சோ்ந்த 78 வயது முதியவா், முதலியாா்பேட்டை தியாகிகள் வீதியைச் சோ்ந்த 49 வயது ஆண், இந்திரா நகா் மீனாட்சிபேட்டையைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி, குயவா்பாளையம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி ஆகிய 5 பேரும் ஜிப்மரில் உயிரிழந்தனா்.

முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டத்தைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், ஏனாம் கோபால் நகரைச் சோ்ந்த 50 வயது ஆண் ஏனாம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 405-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.97 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் கூறியதாவது:

இதுவரை ஒரு லட்சத்து 7, 771 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 20,601 போ் இந்த நோய் பாதிப்புக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 3,004 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், 1,670 போ் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை 15,522 போ் குணமடைந்து வீடு திரும்பினா். திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 495 போ் குணமடைந்தனா். இதையடுத்து, குணமடைந்தோா் விகிதம் 75.35 சதவீதமாக அதிகரித்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com