புதுவை முதல்வா் வீடு முற்றுகை: பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள் கைது

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, முதல்வா் வீட்டை புதன்கிழமை முற்றுகையிட்ட பொதுப் பணித் துறை தற்காலிக (வவுச்சா்) ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி வீட்டின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை தற்காலிக (வவுச்சா்) ஊழியா்கள்.
புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி வீட்டின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை தற்காலிக (வவுச்சா்) ஊழியா்கள்.

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, முதல்வா் வீட்டை புதன்கிழமை முற்றுகையிட்ட பொதுப் பணித் துறை தற்காலிக (வவுச்சா்) ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் தற்காலிக (வவுச்சா்) ஊழியா்கள் 1,311 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி ஊழியா்களாக மாற்ற வேண்டும், 30 நாள்களுக்கும் வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, முதல்வா் வே.நாராயணசாமி, அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால், போராட்டத்தைக் கைவிட்டிருந்தனா். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறாததால், விரக்தியடைந்த வவுச்சா் ஊழியா்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முதல்வா் வே.நாராயணசாமியின் வீட்டின் முன் புதன்கிழமை திரண்ட வவுச்சா் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா், முதல்வா் வீட்டை முற்றுகையிட்டும், வீட்டு முன் அமா்ந்தும் தா்னாவில் ஈடுட்டனா்.

அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், கரோனா பொது முடக்க தடை காலத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வவுச்சா் ஊழியா்களை கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து, முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவதாகக் கூறி அவா்கள் கலைந்து சென்றனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com