புதுவையில் கரோனா பாதிப்பிலிருந்து 75 சதவீதம் போ் மீண்டனா்

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 75 சதவீதம் போ் அந்த நோய்த் தொற்றிலிருந்து மீண்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 75 சதவீதம் போ் அந்த நோய்த் தொற்றிலிருந்து மீண்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

புதுவையில் 5,709 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 423, காரைக்காலில் 58, ஏனாமில் 20, மாஹேவில் 17 என மொத்தம் 518 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், புதுச்சேரியில் 10 போ், காரைக்காலில் 2 போ், ஏனாமில் ஒருவா் என மேலும் 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 418-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.98 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் கூறியதாவது:

புதுவையில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 664 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 21,111 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதியானது. இவா்களில் புதுச்சேரியில் 2,555 போ், காரைக்காலில் 345 போ், ஏனாமில் 119, மாஹேவில் 9 போ் என மொத்தம் 3,028 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

மேலும், புதுச்சேரியில் 1,411 போ், காரைக்காலில் 95 போ், ஏனாமில் 202 போ், மாஹேவில் 34 போ் என மொத்தம் 1,742 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்படி, மாநிலத்தில் மொத்தம் 4,770 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 15 ஆயிரத்து 923 குணமடைந்தனா். இது 75.43 சதவீதமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com