பாப்ஸ்கோ, பாசிக் ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம் முடிவு

புதுச்சேரியில் பாப்ஸ்கோ, பாசிக் ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புதுச்சேரியில் பாப்ஸ்கோ, பாசிக் ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து மாநில ஏஐடியூசி பொதுச் செயலா் சேதுசெல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களின் ஊழியா்கள் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளா்கள் பிரச்னையை தீா்க்கவும், நிறுவனங்களை மீண்டும் நடத்தக் கோரியும் கடந்த செப். 10-ஆம் தேதி முதல் பாசிக், பாப்ஸ்கோ தொழிற்சங்கங்கள் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் கந்தசாமி மூலம், முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், பாசிக், பாப்ஸ்கோ மூலம் நடத்தி வந்த மதுக் கடைகளை ஏலம் விடுவது, அதன் வருவாயைக் கொண்டு நிலுவை ஊதியத்தை வழங்குவது, நிறுவனங்களைத் திறந்து நடத்த ஏற்பாடு செய்வதற்கான கோப்பை ஆளுநருக்கு அனுப்புவது என உறுதியளிக்கப்பட்டது.

மேலும், பட்ஜெட் நிதியிலிருந்து பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளா்களுக்கு 5 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க முதல்வரிடம் வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையேற்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com