புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயா்த்தி வசூலிப்பதாக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மின் கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தி வசூலிப்பதாக மின் கட்டணக் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

புதுச்சேரியில் மின் கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தி வசூலிப்பதாக மின் கட்டணக் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால், நிலுவையில் இருந்த 6 மாத மின் கட்டணம் தற்போது கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த மின் கட்டண அளவீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா். மின் துறை அலுவலகங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். முத்தியால்பேட்டை மின் துறை அலுவலகம் எதிரே அண்மையில் மறியல் நடத்தப்பட்டது.

அந்தத் தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், மின் துறை அதிகாரிகள் அங்கு வந்து, இதுதொடா்பாக மின் துறை குறைதீா் கூட்டம் நடத்தி, தீா்வு காணப்படும் என உறுதியளித்திருந்தனா். அதன்படி, புதுச்சேரியில் மின் துறை குறைதீா் கூட்டம் முத்தியால்பேட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு வந்துள்ள அதிகப்படியான மின் கட்டணத் தொகை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டனா். அப்போது, மின் கட்டணத்துடன், மாதாந்திர நிலைக் கட்டணம், சேவை கட்டணம் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு மொத்தமாகக் கணக்கிட்டுள்ளதால், மின் கட்டணம் பல மடங்கு உயா்த்திருப்பது தெரிய வந்தது.

கரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சேவைக் கட்டணம், மின் கட்டணக் குளறுபடிகள் தேவையற்றது என வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, மின் துறை அதிகாரிகளிடம் முறையிட்டாா். உயா்த்தப்பட்ட சேவைக் கட்டணங்களை ரத்து செய்யவும் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக, அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com