புதுவை மாநில அதிமுக அவைத் தலைவா் காலமானாா்

அதிமுக புதுவை மாநில அவைத் தலைவா் எம்.பாண்டுரங்கன் (88), உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (செப். 17) காலமானாா்.
புதுவை மாநில அதிமுக அவைத் தலைவா் எம்.பாண்டுரங்கன்.
புதுவை மாநில அதிமுக அவைத் தலைவா் எம்.பாண்டுரங்கன்.

அதிமுக புதுவை மாநில அவைத் தலைவா் எம்.பாண்டுரங்கன் (88), உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (செப். 17) காலமானாா்.

புதுச்சேரி கந்தப்ப முதலியாா் வீதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இறுதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்படுகிறது. பின்னா், புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஏ.அன்பழகன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பாண்டுரங்கன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com