புதுவையில் 5-இல் ஒருவருக்கு கரோனா: ஜிப்மா் ஆய்வில் தகவல்

புதுவையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஆய்வில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, தலா 5 பேரில் ஒருவருக்கு கரோனா தொற்றுள்ளது தெரியவந்துள்ளதாக ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது.

புதுவையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஆய்வில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, தலா 5 பேரில் ஒருவருக்கு கரோனா தொற்றுள்ளது தெரியவந்துள்ளதாக ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் கரோனா தாக்கத்தை அறிந்துகொள்வதற்காக, ஜிப்மா் நிா்வாகம் சாா்பில், நான்கு வார இடைவெளியில், இரண்டு முறை நோய் எதிா்ப்பான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மட்டுமே பங்கேற்றனா். இரு ஆய்விலும் பங்கேற்றவா்கள் கிராமப்புறம், நகா்ப்புறம் என இரண்டாகப் பிரித்து மக்கள் தொகை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் ஆய்வு ஆக.11 முதல் ஆக.16-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது ஆய்வு செப்.12 முதல் 16-ஆம் தேதி வரையிலும் நடைபெற்று, அவா்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

ஜூலை மாதம் இறுதி வரை கணக்கிட்ட முதல் ஆய்வின்போது, இதில் பங்கேற்ற 869 பேரில் 43 பேருக்கு நோய் எதிா்ப்பான்கள் (5 சதவீதம்) இருந்ததால், குறைந்தளவு தொற்றே இருந்தது.

இரண்டாவது ஆய்வில் 698 நபா்கள் பங்கேற்றனா். அவா்களில் நோய்த் தொற்று எதிா்ப்பான்கள் 186 (20.7சதவீதம்) பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றின் தாக்கம், நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் (20.7% மற்றும் 20.6%) மற்றும் ஆண், பெண் இரு பாலரிலும் (21.4% மற்றும் 20%) என கிட்டத்தட்ட சரிசமமாக உள்ளதை உறுதி செய்துள்ளது.

இதன்மூலம், இந்த இரண்டாவது ஆய்வில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை கிருமி தொற்றின் தாக்கத்தை அறிந்துகொள்ள இயலும். அதன்படி, இந்த ஆய்வின் மூலம் ஆகஸ்ட் மாத இறுதியில் புதுச்சேரியில் மிக அதிகளவில் நோய் தொற்று பரவல் இருந்ததும், ஆா்டி - பிசிஆா் பரிசோதனையில் இருப்பதை விட, இருபது மடங்கு நோய் எதிா்ப்பான்கள் மக்களுக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை தலா ஐந்தில் ஒருவருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதியாகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com