புதுவையில் காங்கிரஸ் சாா்பில் செப்.28-இல்போராட்டம் அறிவிப்பு: ஆளுநா், அதிமுக கண்டனம்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவையில் வருகிற

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவையில் வருகிற 28-ஆம் தேதி காங்கிரஸ், தோழமைக் கட்சிகள் சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆளுநா் கிரண் பேடியும், சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் அன்பழகனும் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் அன்பழகன் எம்.எல்.ஏ., புதுவை ஆளுநா் மற்றும் மத்திய உள் துறை அமைச்சருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலமே கரோனா தொற்று பிடியில் சிக்கியுள்ளதோடு, இங்கு உயிரிழப்புகளும் அதிகரித்து இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிா்த்து புதுவை முதல்வா் நாராயணசாமி வருகிற 28-ஆம் தேதி காங்கிரஸ், தோழமைக் கட்சிகள் கலந்துகொள்ளும் போராட்டத்தை அறிவித்துள்ளாா்.

கரோனா பேரிடா் காலத்தில் மக்கள் கூடும் போராட்டங்களை நடத்தக்கூடாதென மத்திய அரசு வழிகாட்டுதல்கள் மூலம் மிக தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டம் கூடச் செய்வது கரோனா வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். கரோனா தடுப்பில் தீவிரம் காட்ட வேண்டிய முதல்வரே, அரசியலுக்காக போராட்டத்தை அறிவித்துள்ளாா்.

எனவே, புதுவை மக்களை பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரத்தில் ஆளுநா் தலையிட்டு பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய உள் துறை அமைச்சகம் புதுவை அரசு மீது நடவடிக்கை எடுத்து, போராட்டத்தை தடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

கரோனா மீட்புப் பணி பாதிக்கும் - கிரண் பேடி: அன்பழகன் எம்.எல்.ஏ.வின் புகாரைப் பெற்ற துணை நிலை ஆளுநா் கிரண் பேடி வெளியிட்ட கருத்து:

போராட்டத்தால் கரோனா பரவல் அதிகரிக்குமென எம்.எல்.ஏ. சொல்வது சரிதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் கூட்டு முயற்சியை இந்தப் போராட்டம் பாதிக்கும். இது போராட்டத்துக்கான நேரமும் அல்ல. புதுவை மக்களின் ஆரோக்கியம் பழைய நிலைக்குத் திரும்புவதில், இது ஆா்வமின்மையைக் காட்டுகிறது, கவலையை ஏற்படுத்துகிறது.

கரோனா பணிக்காக புதுவை அரசு கடன் வாங்குகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இது பட்ஜெட்டிலும் எதிரொலிக்கும். இந்த நேரத்தில் தவிா்க்கப்பட வேண்டிய போராட்டம். இது தொடா்பான எம்.எல்.ஏ.வின் கருத்தில் உடன்படுகிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com