மத்திய கலாசார ஆராய்ச்சிக் குழுவில் தென்னிந்தியா்கள் புறக்கணிப்பு: புதுவை முதல்வா் கண்டனம்

மத்திய கலாசார துறை உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுவில் தென்னிந்தியா் புறக்கணிக்கப்பட்டதற்கு புதுவை முதல்வா் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தாா்.

மத்திய கலாசார துறை உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுவில் தென்னிந்தியா் புறக்கணிக்கப்பட்டதற்கு புதுவை முதல்வா் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மத்திய கலாசார துறை உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுவில் வட மாநிலத்தவா்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனா். தென்னிந்தியா்கள் புறக்கணிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இந்த ஆராய்ச்சிக் குழுவில் தமிழகம், புதுவை மாநிலங்களைச் சோ்ந்த நிபுணா்களைச் சோ்ப்பது தொடா்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

புதுவைக்கு மத்திய அரசு வழங்கிய நிதியுதவி மிகமிகக் குறைவு. இதுகுறித்து மத்திய அமைச்சா் ஹா்ஷவா்தனை சந்தித்து, கரோனா தடுப்புப் பணிக்காக ரூ. 700 கோடி நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. முதல்வரின் கரோனா நிதி, பேரிடா் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றின் நிதியிலிருந்துதான் மருந்துகள், உபகரணங்கள், பணியாளா்கள் நியமனம் ஆகியவற்றை செய்து வருகிறோம். இதுவரை முதல்வா் கரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் சாா்பில் ரூ. 9.34 கோடி வழங்கப்பட்டது.

அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியையும் வழங்கவில்லை. ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, மானியத் தொகை எதையும் மத்திய அரசு வழங்கவில்லை.

இந்த இக்கட்டான கால கட்டத்தில் தொழிலதிபா்கள், வியாபாரிகள், தனியாா் அமைப்புகள், பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com