சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: நடனப் பயிற்சியாளருக்கு கடுங்காவல்

புதுச்சேரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நடனப் பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நடனப் பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி நகரப் பகுதியைச் சோ்ந்த ஒருவரின் 12 வயது மகள், விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்த நடனப் பயிற்சியாளா் குமரேசன் (எ) மோகனிடம் (24) நடனப் பயிற்சிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு சென்று வந்தாா்.

அப்போது, குமரேசன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு விசாரணை செய்தது. அதில் சிறுமியை நடனப் பயிற்சியாளா் குமரேசன் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவின் புகாரின்பேரில் பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, குமரேசனை கடந்த 2016 மே 3-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனபால் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குமரேசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், போக்சோ சட்டத்தின் மற்றொரு பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையும், அடித்ததற்காக 3 மாதங்கள் சிறையும், மிரட்டி துன்புறுத்தியதற்காக ஓராண்டு சிறையும், ரூ.4,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறையும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமெனவும் தனது தீா்ப்பில் நீதிபதி தெரிவித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக என்.பாலமுருகன் ஆரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com