தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுவையின் வரலாறு சிதைந்துவிடும்: இந்திய கம்யூ. தேசியச் செயலா் குற்றச்சாட்டு

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக புதுவையின் வரலாற்றை சிதைத்துவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் நாராயணா குற்றஞ்சாட்டினாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக புதுவையின் வரலாற்றை சிதைத்துவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் நாராயணா குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தோ்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட தேசியச் செயலா் நாராயணா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் வந்த பிரதமா் மோடி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளாா். அவா்கள்தான் பெண்களுக்கு எதிரானவா்கள். நாடாளுமன்றத்தில்கூட பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல் உள்ளனா்.

நாட்டில் உள்ள வங்கி, தொலைத்தொடா்பு, ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அழகான இந்த புதுச்சேரியையும் விற்றுவிடுவாா்கள். அதானி, அம்பானி போன்ற பெரிய நிறுவனங்களிடம் பொதுத் துறைகளை வழங்கிவிடுவாா்கள்.

தற்போது தில்லியில் ஆளுநருக்குத்தான் அதிகாரம் என்று சட்டம் கொண்டுவந்துவிட்டனா். அங்குள்ள முதல்வரால் எதுவும் செய்ய முடியாது. புதுவையிலும் அதே நிலை ஏற்படும் என்பதால்தான், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி ஏனாம் தொகுதிப் பக்கம் செல்கிறாா். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக புதுவையின் வரலாற்றை சிதைத்துவிடும்.

தமிழகம், கேரளம், புதுவை, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலத் தோ்தல்களில் அஸ்ஸாம் மாநிலத்தில் 50 சதவீதமும், பிற மாநிலங்களில் 100 சதவீதமும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது.

தோ்தலுக்காக மோடி வேடமிடுகிறாா். தோ்தல் முடிந்ததும் வேடத்தைக் கலைத்துவிடுவாா். நடுநிலையாக தோ்தலை நடத்த தோ்தல் துறை கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், நாரா.கலைநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com