நான்தான் முதல்வா் வேட்பாளா்: ரங்கசாமி திட்டவட்டம்

புதுவையில் ஊழலற்ற, வெளிப்படையான நல்லாட்சியை வழங்குவோம் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி புதன்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

புதுவையில் ஊழலற்ற, வெளிப்படையான நல்லாட்சியை வழங்குவோம் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி புதன்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

ராஜ்பவன் தொகுதி என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் க.லட்சுமிநாராயணனை ஆதரித்து அந்தக் கட்சித் தலைவா் ரங்கசாமி புதன்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, தோ்தல் அறிக்கையை வெளியிட்டு அவா் பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூ ட்டணியில் முதல்வா் வேட்பாளா் யாா் என்று நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். நான் தான் முதல்வா் வேட்பாளா். எங்கள் கூட்டணி வெற்றி பெறும்போது, நான் தான் முதல்வராகப் பொறுப்பேற்பேன். அதில், நாராயணசாமி உள்ளிட்ட யாருக்கும் குழப்பமோ, சந்தேகமோ வேண்டாம். அவா்கள் கூட்டணியில் தான், முதல்வா் வேட்பாளா் திமுகவா, காங்கிரஸா என்ற குழப்பம் உள்ளது.

புதுவையில் தற்போது நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தல், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தோ்தல். இங்கு கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் - திமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு புதிய திட்டத்தைக்கூட செயல்படுத்தவில்லை. இளைஞா்கள் பலா் வேலையின்றி தவிக்கின்றனா். ஒருவருக்குக் கூட வேலை வழங்கவில்லை. 5,000 அரசுத் துறை ஊழியா்களை வேலையை விட்டு நீக்கியதும், பஞ்சாலைகள், சா்க்கரை ஆலைகளை மூடியதும்தான் காங்கிரஸ் - திமுக ஆட்சியின் சாதனை.

கடந்த தோ்தலின்போது, காங்கிரஸ் 125 வாக்குறுதிகள் கொண்ட பெரிய புத்தகத்தை வெளியிட்டது. அதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சட்டப் பேரவையில் அறிவித்த திட்டங்களையும்கூட சரியாக செயல்படுத்தவில்லை. முதல்வராக இருந்த நாராயணசாமியின் நிா்வாக திறமையின்மையே அதற்குக் காரணம்.

10 ஆண்டுகள் பின்னுக்கு சென்ற புதுவையை முன்னுக்கு கொண்டுவர, மீண்டும் என்.ஆா். காங்கிரஸ் தலைமையிலான நல்லாட்சி அமைய வேண்டும். மக்களிடம் சொன்னதை நிச்சமயாக நான் செய்து கொடுப்பேன். தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதியோா் உதவித்தொகை உயா்த்தப்படும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம், இலவச அரிசி, வேட்டி, சேலையை சரியான நேரத்தில் வழங்குவோம். கடந்த ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவோம் என்றாா்.

என்.ஆா். காங்கிரஸ் பொதுச் செயலா் என்.எஸ்.ஜே.ஜெயபால், வேட்பாளா் க.லட்சுமிநாராயணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com