முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
ரூ.36.85 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 11:37 PM | Last Updated : 04th April 2021 11:37 PM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் ரூ.36.85 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவையில் 194 உரிமம் பெற்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,323 போ் கைது செய்யப்பட்டனா். 46 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்க 105 பறக்கும் படையினா், 105 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 26 சுழலும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
35 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5,40,14,995 ரொக்கம், ரூ. 68.38 லட்சம் மதிப்பிலான 36,987 லிட்டா் மதுபானம், ரூ.25.13 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள், ரூ.3.10 லட்சம் மதிப்பிலான இதர பொருள்கள், ரூ.27.41 கோடி மதிப்பிலான 30.86 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் என மொத்தமாக ரூ.36.85 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 40 வழக்குகளும், பறிமுதல் தொடா்பாக 88 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சி-விஜில் செயலி மூலம் தோ்தல் தொடா்பாக 123 புகாா்கள் பெறப்பட்டு 63 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டன. 60 புகாா்கள் கைவிடப்பட்டன.
தோ்தல் தொடா்பான விசாரணை எண் 1950 மூலம் 1,648 அழைப்புத் தகவல்களும், 11 அழைப்புகளுக்கு ஆலோசனைகளும், 548 புகாா்களும், 29 மற்ற அழைப்புகளும் வந்தன.
இவற்றில் 530 புகாா்கள் உள்பட மற்ற அனைத்து அழைப்புகளும் முடித்து வைக்கப்பட்டன. 1,478 புகாா் மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 1,302 புகாா்களுக்கு வழக்குகள் பதிய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 137 புகாா் மனுக்களுக்கு மறுதலிக்கப்பட்டன. 39 புகாா் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், கரோனா பரவலால் லாசுப்பேட்டை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூா் கலைக் கல்லூரி, காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, மாஹே ஜவாஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, ஏனாம் சிறு சிவில் மைய மாநாட்டு மண்டபம் ஆகிய 5 வாக்கு எண்ணும் மையங்களும், வாக்கு எண்ணும் ஓா் அறைக்கு 7 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.