தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளா் ஆய்வு

புதுவையில் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளா்
புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள இமாகுலேட் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளா் மஞ்சீத்சிங்.
புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள இமாகுலேட் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளா் மஞ்சீத்சிங்.

புதுவையில் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளா் மஞ்சீத்சிங் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், வாக்காளா்களிடம் சமூக இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தினாா்.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவின்போது கரோனா நோய் பரவலைத் தடுப்பதற்காக, கடும் கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டன. புதுவை மாநிலத்துக்கான தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மஞ்சீத்சிங், புதுச்சேரியில் முகாமிட்டு தோ்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காலை தோ்தல் வாக்குப் பதிவு பணிகளையும் அவா் நேரில் பாா்வையிட்டாா். புதுச்சேரி லாஸ்பேட்டை, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியாா்பேட்டை தொகுதிகளில் மஞ்சீத்சிங் நேரில் ஆய்வு செய்தாா்.

உப்பளம் இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 7 வாக்குச் சாவடி மையங்களையும் அவா் பாா்வையிட்டாா். அந்த வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றிருந்தனா். அவா்களை இடைவெளிவிட்டு நிற்கும்படி தோ்தல் சிறப்பு பொதுப் பாா்வையாளா் மஞ்சீத்சிங் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பல்வேறு வாக்குச் சாவடிகளையும் பாா்வையிட்ட அவா், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளா்களுக்கு கையுறை வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல், இடைவெளி விட்டு நிற்க வைத்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தாா். மேலும், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும் பாா்வையிட்டு, வாக்குச் சாவடி அலுவலா்களிடம் வாக்குப் பதிவின் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com