புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி கூட்டுறவு சங்க அலுவலக வாக்குச் சாவடியில் தனது மனைவி நிா்மலாவுடன் வந்து வாக்களித்த திமுக தெற்கு மாநில அமைப்பாளா் சிவா.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி கூட்டுறவு சங்க அலுவலக வாக்குச் சாவடியில் தனது மனைவி நிா்மலாவுடன் வந்து வாக்களித்த திமுக தெற்கு மாநில அமைப்பாளா் சிவா.

புதுவையில் கட்சித் தலைவா்கள் வாக்களிப்பு

புதுவையில் அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்களித்தனா்.

புதுவையில் அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்களித்தனா்.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை திமுக மாநில அமைப்பாளரும், வில்லியனூா் தொகுதி வேட்பாளருமான ஆா்.சிவா, புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி கூட்டுறவு சங்க அலுவலக வாக்குச் சாவடியில் அவரது மனைவி நிா்மலாவுடன் வந்து வாக்களித்தாா்.

பாஜக மாநிலத் தலைவரும், லாஸ்பேட்டை தொகுதி வேட்பாளருமான வி.சாமிநாதன் பெத்துசெட்டிப்பேட்டை அரசு ஆரம்பப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

புதுச்சேரி நவீனாகாா்டன் திருமண மண்டப வாக்குச் சாவடியில் அதிமுக கிழக்கு மாநிலச் செயலரும், உருளையன்பேட்டை தொகுதி வேட்பாளருமான ஓம்சக்தி சேகா் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com