வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: 5 போ் கைது

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் மேம்பாலம் அருகில் ஜி.என். பாளையத்தில் வாக்காளா்களுக்கு ஒருவா் பணம் விநியோகம் செய்வதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வில்லியனூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி இளங்கோவன் தலைமையிலான குழுவினா் நிகழ்விடத்துக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனா். அவரது சட்டை பையில் ரூ.1.50 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா், அதே பகுதியை சோ்ந்த முருகன் (32) என்பதும், வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக இந்தப் பணத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படையினா் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, முருகனை வில்லியனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல, திருபுவனை தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் ராமசாமி தலைமையில், பறக்கும் படை குழுவினா் செல்லிப்பட்டு முருகன் கோவில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனா். அவா்களது சட்டைப் பையில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளா் பட்டியலை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், சோரப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ஏழுமலை (45), தனபால் (63) என்பதும், இவா்கள் சுயேச்சை வேட்பாளா் ஒருவருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அவா்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து, 2 பேரையும் வில்லியனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மணவெளி தொகுதியில் ஒரு தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த குணாநிதி (27), ரமேஷ் (25) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com